வெளியானது புஷ்பா 2 படத்தின் டீசர் அப்டேட் இதோ.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தின் டீசர் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சந்தன மரக் கடத்தலை கதை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் மீதான எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் 400 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டியது. இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில், சுனில், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது இதனை தொடர்ந்து புஷ்பாபு படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது அந்த வகையில் புஷ்பா 2 திரைப்படம் சாட்டிலைட் உரிமம் மற்றும் OTT உரிமம் உள்ளிட்ட ஃப்ரீ ரிலீஸ் பிசினஸில் ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் நடிகர் அல்லு அர்ஜுனின் 41வது பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா 2 ட்ரெய்லர் அல்லது டீசர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் அமைந்த சமந்தாவின் நடனத்தில் உருவான ஐட்டம் பாடல் புஷ்பா 2 வில் இடம் பெறாது என கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version