தென்னிந்திய சினிமாவில் முன்னணி, நடிகர்களான விஜய் சேதுபதி அரவிந்த்சாமி மற்றும் பிரபல நடிகர் அதிதி ராவ் ஆகியோர்களின் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்திற்கு காந்தி டாக்ஸ் என்ற பெயரை வைத்துள்ள நிலையில் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார்.
கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு மௌன படமாக உருவாகியுள்ள இந்த காந்தி டேக்ஸ் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது. கடைசியாக நடிகர் விஜய் சேதுபதி கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் இதனை தொடர்ந்து தற்பொழுது விடுதலை மற்றும் இந்தியில் மேரி கிறிஸ்துமஸ் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் அவருக்கு வில்லனாக கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
vijay sethupathy

இவ்வாறு தமிழ், ஹிந்தி என இரண்டு மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் சதத்மே இல்லாமல் காந்தி டாக்ஸ் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இது மௌன படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் விஜய், சேதுபதியுடன் இணைந்து அதிதி ராவ் அரவிந்த்சாமி பாலிவுட் நடிகர் சித்தார்த் யாதவ் ஆகியோர்களும் நடித்துள்ளார்கள்.

இதற்கு முன்பு மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருந்த செக்க சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் மூவரும் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த படத்தினை ஜி ஸ்டுடியோஸ் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் மேலும் காந்தி டாக்ஸ் படம் சின்ன பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது.

மேலும் மௌனம் படமாக உருவாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இரண்டு வருகிறது. 1987ஆம் ஆண்டு சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமலஹாசன், அமலா நடிப்பில் புஷ்பக விமானம் என்ற பேசும் படம் வெளியானது டார்க் காமெடி ஜானரில் வெளியான புஷ்பக விமானம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மௌனம் படமாக காந்தி டாக்ஸ் உருவாகியுள்ளது.