பாபி சிம்ஹா நடிக்கும் வசந்த முல்லை திரைப்படத்தின் டீஸர் இதோ.!

வெள்ளித்திரையில் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய குறும்படங்களில் நடித்து பின்பு எப்படியாவது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காலடி எடுத்து வைத்தவர் தான் பாபி சிம்ஹா இவர் மிகவும் புகழ்பெற்று விளங்கிய திரைப்படம் என்றால் அது ஜிகர்தண்டா திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பின் மூலம் தான்.

இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது என்றுதான் கூற வேண்டும் மேலும் பாபி சிம்ஹா பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் இவர் வில்லனாக நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இவருக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துக்கொண்டே வந்தது.

அதிலும் குறிப்பாக இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் எப்படியாவது ஒரு திரைப்படத்தில் கூட நடிக்க மாட்டாரா என பலரும் கேட்டு வந்த நிலையில் இவர் கதாநாயகனாக வசந்த முல்லை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை ரமணன் புருஷோத்தமா இயக்கியுள்ளார் மேலும் இவர் குறும்படங்கள் அதிகமாக இயக்கி ரசிகர்களிடையே வெற்றிகண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்கும் இந்த முதல் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெறும் என பல சினிமா பிரபலங்களும் கூறி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் பாபி சிம்ஹா இந்த திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமாக நடித்துள்ளார் எனவும் தகவல் கசிந்துள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படம் ஆக்ஷன் திரில்லர் கதை களமாக இருக்கும் எனவும் தகவல் வைரலாகி வருகிறது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீஸர் தற்பொழுது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இந்த திரைப்படத்தில் பாபி சிம்ஹாவின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்து விடும் எனவும் பலரும் கூறி வரும் நிலையில் இந்த டீஸர் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment