காசுக்கு ஓட்டு போடும் யோகி பாபு “மண்டேலா” திரைப்படத்தின் டீசர் இதோ.!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டு வலம் வருகிறார்  நடிகர் யோகிபாபு.

அதோடு மட்டும் தனது நடிப்பு திறமையை நிறுத்திக்கொள்ளாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து உள்ளார் அத்தகைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தோல்வியை பெறாமல் ஓரளவு லாபத்தை கொடுத்துள்ளதால் அடுத்தடுத்த படங்களிலும் தற்போது ஹீரோவாக களம் இறங்கியுள்ளார்.

அந்தவகையில் தற்போது மண்டேலா என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க தேர்தல் சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது தேர்தலில் எந்த மாதிரியான தவறுகள் நடக்கும் என்பதை தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளதோடு அவ்வப்பொழுது இதில் காமெடியையும் நன்கு திணித்து உள்ளதால் படம் வேற லெவலில் இருக்கும் என தெரிய வருகிறது.

தேர்தலுக்காக வெளி ஊரில் இருந்தும் வெளி நாட்டில் இருந்தும் ஆட்களை இறக்கிவிட்டு போட வைத்து அந்த தில்லுமுல்லு அப்பட்டமாக தோலுரித்துக் உள்ளது மண்டேலா திரைப்படம். மேலும் அந்த இருபது ரூபாய் டோக்கன் கொடுப்பது ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளது.

இந்த படத்தில் யோகிபாபு சவர தொழிலாளியாக நடித்துள்ளார்.

இதோ மண்டல திரைப்படத்தின் டீசர்.

Leave a Comment

Exit mobile version