இணையத்தில் பட்டையை கிளப்பும் சிம்புவின் மஹா திரைப்படத்தின் டீஸர் இதோ.!

0

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி பின்பு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகர் தான் சிம்பு இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் மிக ஆவலாக இருப்பார்கள் இவர் குழந்தை நட்சத்திரமாக நிறைய திரைப்படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

இவர் சிறு வயதிலேயே நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்ததால் இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது அவ்வாறு சிம்பு நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மஹா இந்த திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து இருக்கலாம் என பல சினிமா பிரபலங்களும் கூறிவருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே சிம்பு நடிக்கும் எல்லா திரைப்படங்களுக்கும் அவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் அந்த வகையில் இவர் நடித்துள்ள மஹா திரைப்படமும் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என சிம்பு நம்புகிறார்.

ஆனால் இந்தத் திரைப்படம் எப்போது வெளியாகும் என பலரும் கேட்டு வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகி உள்ளது.இந்த திரைப்படத்தில் சிம்பு மிகவும் நன்றாக நடித்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.