திரில்லரில் மிரட்டும் நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தின் டீசர் இதோ.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சொந்த நிறுவனமான ரவுடி பிரிக்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது.

சற்று முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் ஹாரர் ஜர்னரில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தினை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார் இவர் இதற்கு முன்பாக நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா திரைப்படத்தின் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதனை தொடர்ந்து இந்த படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார் இவர்களை தொடர்ந்து சத்தியராஜ், மற்றும் பாலிவுட் நடிகர் அனுப்பப் கேர் ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாராவின் நடிப்பில் ஹாரர் படம் உருவாக உள்ளது.

இந்த திரைப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் 95 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் ஓடும் படமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இடைவெளி இல்லாமல் இந்த திரைப்படம் ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி அன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

எனவே இந்த படத்தின் ட்ரைலர் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நயன்தாராவுக்கு பிறந்த நாள் என்பதால் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இவ்வாறு நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்னும் மற்ற திரைப்படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment