லைன் லவ் மூடுல இருக்கு மச்சான்.! நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட லோக்கல் சரக்கு பட டீசர் இதோ.!

வெள்ளித்திரையில் தற்பொழுது புது புது நடிகர்கள் உருவாகிக் கொண்டே வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் திரைப்படங்களில் இசையமைத்துக் கொண்டிருந்த பிரபலங்கள் கூட தற்பொழுது கதாநாயகனாக அசத்தி  வருகிறார்கள்.அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் ராஜ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லோக்கல் சரக்கு.

நடிகர் யோகி பாபு,நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் பல பிரபலங்களும் நடித்துள்ளார்கள் இந்தத் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வந்தது.

இந்நிலையில் லோக்கல் சரக்கு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த திரைப்படத்தின் முழு கதை குடியால் சாதாரண மனிதன் எப்படி எல்லாம் மாறுகிறான் என்பது பற்றி போல இருக்குமாம் அது மட்டுமல்லாமல் இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருக்கும் போலையே படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு இருப்பதால் பலரும் யோகி பாபு நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு மக்கள்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள். அதேபோல் இந்த திரைப்படத்தின் டீசரை பார்க்கும் பொழுது யோகி பாபு வேற லெவலில் நடித்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது எனவும் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் யோகி பாபு ஒரு சின்னகதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தோன்றி தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து விட்டார் என்பது மிகப்பெரிய சாதனை தான்.

Leave a Comment