உதயநிதி நடித்துள்ள ‘கலகத் தலைவன்’ படத்தின் டீசர் இதோ.!

நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் கலகத் தலைவன் திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார் மேலும் இந்த படத்தினை ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்து வருகிறார்.

மேலும் இவர்களை தொடர்ந்து பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் தற்பொழுது கலக தலைவன் திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைபடைந்து விட்டதாகவும் அதற்கான போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள கலகத் தலைவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது அதாவது அந்த டீசரை பார்க்கும்பொழுது கடத்தல் கும்பலை பிடிக்க உதயநிதி பல முயற்சிகளை செய்கிறார்.

மேலும் இவ்வளவு பிரச்சனைகளை தாண்டி தன்னுடைய யோசனையினால் எப்படி அவர் கும்பலை பிடிக்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் திரில்லர் நிறைந்த ஆக்சன் படமாக இந்த படம் உருவாகியுள்ள நிலையில் டீசர் ரசிகர்களின் கவனத்தை பெரிதளவில் ஈர்த்திருக்கிறது மேலும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment