மீண்டும் பட்டையை கிளப்பபோகும் விஜய் சேதுபதி வெளியானது படத்தின் ரிலீஸ் தேதி.! மிரளவைக்கும் போஸ்டர்

ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து வந்த விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இருக்கும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது மேலும் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவிலும் வைரலாகி வரும் நிலையில் இது குறித்த பல தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது விஜய் சேதுபதி புரியாத புதிர் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இவருடைய இயக்கத்தில் தற்பொழுது மைக்கேல் என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது மேலும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சந்தீப் கிஷான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் விஜய் சேதுபதி, கௌதமேனன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது இந்நிலையில் தற்பொழுது இந்த படம் வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளது.

எனவே இது குறித்த போஸ்டரை தற்பொழுது பட குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள். அந்த போஸ்டர் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது எனவே அந்த படத்தினை பார்க்கும் பொழுது ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருப்பது தெரிய வருகிறது. முக்கியமாக விஜய் சேதுபதி சிகரெட் பத்தடிக்கும் ஸ்டைலே தனியாக இருக்கிறது.

இந்த படத்திற்காக விஜய் சேதுபதி தன்னுடைய தொப்பையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment