தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டு இருக்கும் ஹீரோக்களின் உண்மையான பெயர் இதோ.!

Tamil cinema actors real name: தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட பிரபல நடிகர்களின் உண்மையான பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படுவர் ரஜினிகாந்த். இவர் சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களைகொண்டு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உண்மையான பெயர் (சிவாஜி ராவ் காய்க்கவாட் ) என்பது குறிப்பிடத்தக்கது.

2. விஜய் அவர்கள் தனது சிறந்த நடிப்பு மற்றும் நடனம் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். திரை உலகில் தொடக்க காலத்திலிருந்தே விஜய் என்ற புனைபெயரில் அறிமுகமாகி திரைக்குள் கொடிகட்டி பறந்தவர் என்பது நாம் அறிந்ததே.ஆனால் இவரின் உண்மையான பெயர் (ஜோசப் விஜய் சந்திரசேகர்).

3. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது திறமையை வெளிக்காட்டி வெற்றிக்கொடி நாட்டவர்களில் ஒருவர் சூர்யா. சரியான ஹிட் படங்களை கொடுக்காவில்லை என்றாலும் அதிக ரசிகர்களை கொண்ட பட்டியலில் இவரும் நீடித்துக்கொண்டிருக்கிறார். இவரின் உண்மையான பெயர் (சரவணன்).

4. சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சத்யராஜ். சினிமாவில் பலமுக தன்மை கொண்டவராக விளங்குகிறார். எந்தவிதமான கேரக்டராக இருந்தாலும் அந்த கேரக்டரில் தனது திறமையை வெளிக்காட்டி தமிழ் சினிமாவில் நிலைத்து கொண்டிருக்கிறார். இன்றளவிலும் அதிக ரசிகர்களை கொண்டவர்கள் பட்டியலில் இவரும் ஒருவர். இவரது உண்மையான பெயர் (ரங்கராஜ்).

5. தமிழ் சினிமாவில் அதிக வெற்றி படங்களை கொடுத்த நபர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். தற்போது இவர் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலில் முழுநேர கவனத்தையும் செலுத்தி வருகிறார். தமிழ்சினிமாவில் ஒரு பின்புலமும் இல்லாமல் அறிமுகமாகி தமிழ் திரைப்பட சங்கத் தலைவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உண்மையான பெயர் ( விஜயராஜ்).

6. தேசிய விருது பெற்ற நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை பெற்ற நாயகன் லிஸ்டில் இவரும் ஒருவராக அமைந்துள்ளார். இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது. சமீப காலமாக சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவரது உண்மையான பெயர் (வெங்கடேஷ் பிரபு).

7.பெண் ரசிகர்கள் மத்தியில் இளம் நாயகனாக இன்றளவிலும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜீவா. இவர் பிரபல தயாரிப்பாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜீவா அவர்களின் உண்மையான பெயர் (அமர் சௌத்ரி).

8. தமிழ் சினிமாவில் சிவாஜி,கமலுக்கு அடுத்தாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் விக்ரம். மற்ற நடிகர்கள் நடிக்க முடியாத கதையை தேர்ந்தேடுத்து அதில் நடிப்பை வெளிப்படுத்தி பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் விக்ரம். இவரது உண்மையான பெயர் (கென்னடி ஜான் விக்டர்).

Leave a Comment