கேக்கை தல அஜித்திற்கு ஊட்டிய சிம்பு இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

0

தன்னைத் தானே வருத்திக் கொண்டு தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடித்துவரும் நடிகர் தான் தல அஜித் இவர் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவர் உடன் இணைந்து சினிமா பிரபலங்கள் பலரும் நடித்து வருகிறார்கள்.

தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து தல அஜித் வலிமை  திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தார் ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரும்படியாக பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர்கள் தள்ளி வைத்துவிட்டார்கள்.

இருப்பினும் தல அஜித் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர் அதுமட்டுமல்லாமல் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

simbu
simbu

இந்நிலையில் நடிகர் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தல அஜித் கலந்து கொண்டுள்ளார் அப்போது சிம்பு கேக் வெட்டி தல அஜித்திற்கு ஊட்டும் பொழுது எடுத்த புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.