கனவு நாயகன் அப்துல் கலாமுடன் வடிவேல் பாலாஜி எடுத்து கொண்ட அறிய புகைப்படம் இதோ.!

0

சின்னத்திரையில் வடிவேலு என்று அழைக்கப்பட்டவர் வடிவேல் பாலாஜி. இவர் வெள்ளித்திரையின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலுவின் வசனங்கள் மற்றும் உடல் அமைப்பை அப்படியே பின் வந்ததன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் இப் பெயர் கிடைத்தது.

சின்னத்திரையில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்ததன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் அது இது எது, கலக்கப்போவது யாரு மற்றும் பல நிகழ்ச்சிகளில் தனது காமெடியை வெளிப்படுத்தி வெள்ளித்திரையினரையும் தனது பக்கம் இழுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து அந்த வடிவேல் பாலாஜி சமீப காலமாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் இறந்தார்.

இது தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது மற்றும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும்  நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி  செய்தனர்.

இந்த நிலையில் அவரைப் பற்றிய செய்திகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர் அவரது ரசிகர்கள் அந்த வகையில் தற்பொழுது வடிவேல் பாலாஜி மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது ஊடகங்கள் மத்தியில் வெளிவந்துள்ளது அத்தகைய புகைப்படம் இதோ.

vadivel balaji
vadivel balaji