சூப்பர் ஸ்டாரின் 100 -வது திரைப்படத்தின் ஷூட்டிங் பார்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.! கூட எந்த பிரபலம் இருக்கிறார் பாருங்கள்.

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி திரைப்படங்களில் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அத்தகைய படங்கள் வசூலிலும் வாரி குவிப்பதால் பல ஆண்டுகளாக நம்பர் 1 ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் தற்போது சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து புதிதாக அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக எடுக்கப்பட்ட வந்த நிலையில் திடீரென அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் உடனடியாக ரஜினியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார்.

இதை தொடர்ந்து அண்ணாத்த படப்பிடிப்பு பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் ரஜினியின் நூறாவது திரைப்படம் ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியானது இந்த படம் அவருக்கு சிறப்பான திரைப்படமாக இருந்தாலும் இந்த திரைப்படம் திரையரங்கில் சுமாரான வெற்றியையே பெற்றது.

இந்த படத்தின்  சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

rajini 100
rajini 100

Leave a Comment