தற்போது ஒரு நடிகரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அடையாளமே தெரியாமல் மிகவும் மோசமான நிலையில் அவரது புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நடிகர் யார் என்று தெரியுமா அவர் தான் தவசி இவர் கிழக்குசீமை என்ற திரைப்படத்தில் ஆரம்பித்து தற்போது ரஜினியுடன் அண்ணாத்தா என்ற திரைப்படம் வரை நடித்துள்ளார்.
இவர் நடித்த பிரபலமான திரைப்படம் என்றால் அது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் தான். இதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
மேலும் இவர் ரஜினிமுருகன், மெர்சல் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். எனவே தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஆள் அடையாளமே தெரியாமல் மிகவும் ஒல்லியாக ஆகிவிட்டார்.
இவர் மருத்துவ சிகிச்சைக்காக சினிமா பிரபலங்கள் பலரிடமும் உதவி கேட்டு வருகிறார். ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் தவசியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
