இதோ வந்தாச்சு வாரிசு படத்தின் OTT ரிலீஸ் தேதி.! உற்சாகத்தில் ரசிகர்கள்…

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தின் OTT ரிலீஸ் அப்டேட் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒரு திகழ்ந்து வரும் நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி கண்ட திரைப்படமான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் வாரிசு திரைப்படம் வெளியாகி இதுவரைக்கும் 300 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

வாரிசு திரைப்படத்துடன் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் மோதியது. இதனால் இந்த இரண்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது அதிலும் குறிப்பாக விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு ஏகபோக எதிர்பார்ப்பு இருந்தது என்றே சொல்லலாம்.

ஆனால் விஜயின் வாரிசு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் வசூலில் மிகப்பெரிய அளவில் லாபம் பார்த்தது. இதனைத் தொடர்ந்து வாரிசு திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்து விட்டதால் தற்போது இந்த படத்தை OTT-யில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அந்த வகையில் வாரிசு படத்தில் OTT உரிமையை கைப்பற்றிய அமேசான் பிரைம் வீடியோ பிப்ரவரி 22ஆம் தேதி OTT-யில் வெளியிடுவதாக தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகி வைரலாகிய நிலையில் அடுத்த அடுத்த அப்டேட் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ரிலிஸ் ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment