சூர்யா,கௌதம் மேனன் இணைந்த திரைப்படத்திற்கு அதிகாரபூர்வ டைட்டில் இதோ.!

0

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்த நடிகர்களில் வலம் வருபவர் தான் சூர்யா இவர் கௌதம் மேனன் கூட்டணியில் நடித்த ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு நன்றாக கை கொடுத்ததால் மீண்டும் எப்பொழுது கௌதம் மேனன் கூட்டணியில் சூர்யா இணைவார் என்று ரசிகர்கள்  எதிர்பார்த்தார்கள்.

வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது நெட்பிளிக்ஸ் நிறுவனம் தமிழில் நவரசா என்ற பெயரில் ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை எடுத்து வருகிறது.இதில் ஒன்பது இயக்குனர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்தத் திரைப்படங்கள் அனைத்துமே குறும்படங்கள் போல தான் இருக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே நெட்பிளிக்ஸ் தயாரித்த பாவக் கதைகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நவரசா என்ற ஆந்தாலஜி படத்தை தயாரித்து வருகிறது இந்த திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என பலரும் கூறி வருகிறார்கள்.

இதில் சூர்யா மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரும் ஒரு மியூசிக்கல் படத்தை எடுத்துள்ளனர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் இந்நிலையில் கௌதம் மேனன் மற்றும் சூர்யா இணைந்த இந்த திரைப்படத்திற்கு என்ன தலைப்பு வைப்பார்கள் என ரசிகர்கள் பலரும் கேட்டு வந்தார்கள் அதற்கு ஏற்றது போல் தற்பொழுது இவர்கள் கைகோர்த்த இந்த படத்திற்கு கிட்டார் கம்பி மேலே நின்று என டைட்டில் வைத்துள்ளார்கள்.

surya 4
surya 4

சூர்யா வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் ஒரு காதல் பாட்டுக்கு கிட்டார் வைத்துக்கொண்டு மிகவும் அழகாக நடனமாடி இருப்பார் அதேபோல் இந்த திரைப்படத்திலும் சூர்யா ஒரு பாடகராக இருக்கலாம் என பலரும் கூறுகிறார்கள் மேலும் நவரசா வெப்சீரிஸ் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது எனவும் தகவல் கிடைத்துள்ளது.