கௌதம் கார்த்திக் நடிக்கும் திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் இதோ.!

தமிழ் சினிமா உலகில் வாரிசு நடிகராக களம் இறங்கி பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் தான் கௌதம் கார்த்திக் இவரது நடிப்பில் வெளியான தேவராட்டம், முத்துராமலிங்கம்,இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று இவரை மிகவும் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்க செய்தது.

மேலும் இவரது தந்தையான கார்த்திக்கு உடல்நிலை சரியில்லாமல் தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் இவர் எப்படியாவது மீண்டும் வரவேண்டும் என்பதற்காக பல ரசிகர்கள் இறைவனிடம் பிரார்த்தனை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் கௌதம் கார்த்திக் சிம்பு நடிப்பில் கூடிய சீக்கிரம் உருவாக உள்ள பத்து தலை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கௌதம் கார்த்திக்கின் அடுத்த படத்திற்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது கௌதம் கார்த்திக் இயக்குனர் அருண் சிதம்பரம் இயக்கவுள்ள செல்லப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அதேபோல் படத்திற்கான மோஷன் டீசர் நாளை காலை 11.5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த தகவல் தற்போது கௌதம் கார்த்திக் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment