நடிகர் விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இதோ.!

வெள்ளித்திரையில் நிறைய சர்ச்சைகளில் சிக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷால் இவர் என்னதான் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் பார்த்தால் விஷால் ரசிகர்களுக்கு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புது புது கதை அம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் விஷால் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விட்டது அதுவும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் இவருக்கும் ஒரு புதிய அங்கீகாரத்தை கொடுத்துவிட்டது இவரது நடிப்பில் தற்போது தமிழில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறதாம்.

ஆம் இவரது நடிப்பில் மிகவும் விறுவிறுப்பாக ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் தான் வீரமே வாகை சூடும் இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் து. ப. சரவணன் இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளதாகவும் தகவல் வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து விஷால் நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருவதால் இவர் நடிக்கும் பல திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். குறிப்பாக விஷால் எப்பொழுது துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் நடிப்பார் என பல கேள்விகளை கேட்டு வரும் நிலையில்.

தற்பொழுது வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விஷால் ரசிகர்கள் தற்போது ஒரே கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

Leave a Comment

Exit mobile version