சபாபதி திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இதோ.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒருசில நிகழ்ச்சிகளில் பங்கேற்று பின்பு பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு நண்பனாகவும் காமெடி நடிகனாகவும் நடித்து தற்போது கதாநாயகனாக பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகர் தான் சந்தானம் இவர் ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்களை மகிழ்வித்து வந்தார்.

பின்பு இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இவர் கதாநாயகனாகவே தற்பொழுது பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் சந்தானத்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் டிக்கிலோனா.

இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு சந்தானத்தை பாராட்டினார்கள் மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சந்தானம் இன்னும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.பொதுவாகவே இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறும் அந்த வகையில் அவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் சபாபதி.

இந்த திரைப்படத்தை பற்றி சில ரசிகர்கள் பல மாதங்களாகவே பலவிதமான கேள்விகளை எழுப்பி வந்தார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது சபாபதி திரைப்படதின் ட்ரைலர் நவம்பர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் நவம்பர் 19ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் சபாபதி திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் தற்போது உற்சாகத்தில் குதித்து வருவது மட்டுமல்லாமல் சந்தானம் அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடித்து வருகிறாரோ அந்த திரைப்படத்தை பற்றியும் நாங்கள் தெரிந்து கொள்வதற்கு மிக ஆவலுடன் இருக்கிறோம் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment