நிஜத்திலும் நந்தினி உடன் ரொமான்ஸ் பண்ணும் ஆதித்த கரிகாலன்.? வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் திரைப்படங்களில் ஒன்றுதான் பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் உருவாகி வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை தருவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் நடிகர் விக்ரம் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரங்களை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வந்தார்கள் விக்ரம் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார் அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராயும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்பதும் நமக்கு தெரிந்த விஷயம் தான் இவர்கள் இருவரின் நடிப்பு முதல் பாகம் மட்டும் இரண்டாம் பாகத்திலும் மிரட்டி விட்டது அந்த அளவிற்கு திரைப்படங்களில் விக்ரம் கதாபாத்திரமும்,ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் ஆவலாக பார்த்தார்கள்.

மேலும் தற்பொழுது நடிகர் விக்ரம் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் கைகள் மூலம் ஹார்டின் சிம்பிள் கொடுத்த பொழுது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவில் பின்னணி இசை இருப்பதால் பாட்டிற்கு ஏற்ப இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது.

ஏற்கனவே ராவணன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும்,நடிகர் விக்ரமும் காதலிப்பது போல் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் காட்டியிருப்பார் அதேபோல் தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் அமைந்துள்ளது என ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் தற்போது இந்த வீடியோவை பார்த்த ஒரு சில ரசிகர்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள் என இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment