சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஒரு பெரிய விசில் போடுங்க பிரபல கிரிக்கெட் வீரருடன் நடிகர் சூரி செய்த அட்டகாசம்.! வைரலாகி வரும் வீடியோ இதோ.!

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக காமெடி நடிகனாக நடித்து வந்து தற்போது கதாநாயகனாக மிரட்டி வரும் நடிகர் தான் சூரி இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா காமெடியில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார் என்று தான் கூற வேண்டும். இதனை தொடர்ந்து பல பிரபலங்களுடன் நடித்து எப்படியோ தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக இடம் பிடித்து விட்டார்.

மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் விடுதலை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தது மட்டுமல்லாமல் படம் வசூல் ரீதியாகவும் ஓரளவுக்கு வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு காமெடி நடிகனை எப்படி கதாநாயகனாக கொண்டுவர வேண்டும் என்று இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்கு தெரிந்துள்ளது என பல சினிமா பிரபலங்களும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை கூறி வந்தார்கள்.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த திரைப்படத்தில் நடித்ததற்கு நடிகர் சூரியை பல பிரபலங்களும் பாராட்டி வந்தார்கள் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் எப்பொழுது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என பல விதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இவ்வாறு ரசிகர்களிடமிருந்து பல கேள்விகள் எழும்பி வந்ததால் இதனை கவனித்த வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகத்தின் ஒரு சில முக்கிய காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டும் அதனை எடுத்து விட்டால் உடனே படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்று ரசிகர்களுக்கு தெரிவித்தாராம்.

தற்பொழுது நடிகர் சூரி பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஒரு பெரிய விசில் போடுங்க என்று இருவரும் விசில் அடித்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனைத் தொடர்ந்து பார்த்தால் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Leave a Comment