விஜய் சேதுபதி வசனத்தில் விமல் நடிக்கும் குலசாமி படத்தின் மோஷன் போஸ்டர் இதோ.!

vimal
vimal

தரமான ஒரு சில திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் தான் விமல் இவரது நடிப்பில் தற்போது குலசாமி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

குட்டி புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பின்னணி பாடகர் மஹாலிங்கம் அவர்கள் இசையமைக்கிறார் நாயகன்,பில்லா பாண்டி போன்ற படங்களை இயக்கிய குட்டி புலி சரண சக்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தில் விமலுடன் இணைந்து தன்யா ஹோப் கதாநாயகியாக நடித்துள்ளார் அது மட்டுமல்லாமல் போஸ் வெங்கட்,குட்டிப்புலி சரவணன் சக்தி, வினோதினி,மகாநதி சங்கர் போன்ற முக்கிய பிரபலங்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள் இதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் வசனம் எழுதி உள்ளாராம்.

மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். மேலும் குலசாமி படத்தின் மோஷன் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும் பொழுது குலசாமி திரைப்படம் விமலுக்கு நல்ல திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறதாம் இதை தவிர்த்து பார்த்தால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திற்காக வசனம் எழுதி உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. விஜய் சேதுபதி வசனம் மிகவும் அருமையாக இருக்கும் அதனால இந்த குலசாமி திரைப்படம் கண்டிப்பாக மக்களிடையே பெரிய வரவேற்பை பெரும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.