“ஆன்டி இந்தியன்” படத்தின் மோஷன் போஸ்டர் இதோ.! ப்ளூ சட்டை மாறனை என்னடா இப்படி வச்சி செஞ்சிடிங்க..

திரை உலகில் ஒரு படம் ரிலீஸ் ஆனா பிறகு மக்கள் அந்த படத்தை பார்க்க அதிக ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய பங்கு வகிப்பது விமர்சனங்கள்தான். விமர்சனங்களை பார்த்த பிறகுதான் மக்கள் கூட்டம் திரையரங்குக்கு படையெடுக்கின்றன அந்தவகையில் யூடியூப் சேனல்களில் பல பிரபலங்கள் படங்களை விமர்சித்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவரான ப்ளூ சட்டை மாறன் தமிழ் சினிமாவில் வெளியான பல்வேறு திரைப்படங்களை தாறுமாறாக கிழித்து தொங்க விடுவதால் வல்லவராக இருக்கிறார். அது டாப் நடிகரின் படங்களாக இருந்தாலும் நடிகையின் படங்களாக இருந்தாலும் சரி எப்போதும் குறை கூறுவதைய மட்டுமே வைத்திருக்கிறார் புளு சட்டை இதனால் பல ரசிகர்கள் அவரை விமர்சித்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே வாய்ச்சவடால் மூலம் பேசி வந்த ப்ளூ சட்டை மாறன்.

திடீரென ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவெடுத்தார் அந்த வகையில் இவர் தயாரித்தும், நடித்து உள்ள படமான ஆன்டி இந்தியன் திரைப்படத்தை சினிமாவில்  டாப் நடிகரின்ரசிகர்கள் பலரும் எதிர்நோக்கி இருக்கின்றனர் இந்த படம் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் சரி இந்தப் படத்தின் விமர்சனத்தை தாறுமாறாக கிழிக்க் ரெடியாக இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தின் சான்றிதழில் கூட வாங்க முடியாமல் திக்குமுக்காடிய ஆன்டி இந்தியன் படம் ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த படத்தில் பல காட்சிகளில் இருக்குமாறு தெரிகிறது இதனை அடுத்து ஆன்ட்டி இந்தியன் பட குழு மேல்முறையீடு செய்தது ஆனால் அதற்கான விவரங்கள் தெரியவில்லை.

ஆனால் ஆன்டி இந்தியன் திரைப்படம் அரசியல் சார்ந்த படமாக இருக்கிறது என கூறப்படுகிறது. ஆன்ட்டி இந்தியன் படத்தின் மோஷன் போஸ்டர் தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த மோஷன்  போஸ்டரை நீங்களே பாருங்கள்.

Leave a Comment