மிர்ச்சி சிவா நடிக்கும் சூது கவ்வும் 2 திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு.! அடேங்கப்பா பயங்கரமா இருக்கே..

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்களில் ஒன்றுதான் சூது கவ்வும் திரைப்படம். கடந்த 2013 ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை பெற்றதாகவும் தகவல் வெளியானது.

மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவராதா என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று பல பிரபலங்களும் கூறிவந்த நிலையில் தற்பொழுது சூது கவ்வும் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

siva
siva

இயக்குனர் எம்.எஸ் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் மிர்ச்சி சிவா அவர்கள் நடித்து வருகிறார். மேலும் இந்த இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் மற்றும் பல பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். இதை தொடர்ந்து பார்த்தால் இந்தத் திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை பட குழு சமீபத்தில் வெளியிட்டது.

அந்த போஸ்டரில் சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும் என்று குறிப்பிட்டு இருந்தது.ஆனால் தற்பொழுது ரசிகர்களுக்கு ஷாக் தரும் வகையில் இந்த சூது கவ்வும் இரண்டாம் பாகத்தின் மோஷன் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது ஆம் நடிகர் மிர்ச்சி சிவா பார்ப்பதற்கு கெத்தாக இருக்கும் இந்த மோஷன் போஸ்டர் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் இந்த திரைப்படம் வெளியாகிவிட்டால் வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள் ஏனென்றால் இந்த திரைப்படத்தில் மிர்ச்சி சிவா அவர்கள் நடிப்பதால் மக்கள் விரும்பி பார்ப்பார்கள் பொதுவாகவே இவர் காமெடி கலந்த கதாபாத்திரங்களில் தான் அதிகமாக நடிப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

Leave a Comment