தமிழில் வெளியாகி அதிக வசூல் பெற்ற டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ.! கடைசியில் தளபதி விஜய்.! அப்போ ரஜினி..

0

இந்திய சினிமாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வெற்றி / தோல்வி அடைகின்றன. ஆனால் ஒரு சில திரைப்படங்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி நடை போடுவது வழக்கம் அந்த வகையில் டாப் நடிகர்கள் கூட அந்த வசூலை ஈட்டி இருக்கமாட்டார்கள் சாதாரண ஒரு படம் வந்து அந்த சாதனையை நிகழ்த்திய இருக்கும் அப்படி சினிமாவில் நடந்து இருப்பது நாம் அறிந்த ஒன்று தான்.

அதற்காக சும்மா சொல்லிவிடக்கூடாது டாப் நடிகர்கள் படங்களில் எப்பொழுதும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துவது வழக்கம் ஆனால் ஒரு சில படங்களில் படம் நன்றாக இருந்தாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்று வசூலை பெறாமல் போவதும் உண்டு. சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் எது வேணாலும் வரலாம் அந்த வகையில் தமிழில்  உலகில் அதிக வசூல் வேட்டை நடத்திய 5 படங்களின் வசூலை தற்போது பார்ப்போம்.

  1. முதலிடத்தில் இருப்பது பாகுபலி 2 இந்த திரைப்படம் முதல் பாகத்தின் வெற்றியை பெற்ற பிறகு இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி இருந்தது. இதனால் இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல கோடிகளை கைப்பற்றியது படம் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்ததால் இந்த திரைப்படம் கடைசி வரையிலும் 1810 கோடி வசூலை அள்ளியது.

2.  இரண்டாவது இடத்தை கைப்பற்றியது தமிழ் சினிமாவில் டாப் நடிகராக     இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் சுமார் 800 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் ஒரு வருடங்களுக்கு மேலாக எடுத்தார் சங்கர்.

3. மூன்றாவது இடத்தில் பாகுபலியின் முதல் பாகம் யாரும் எதிர்பார்க்காத  அளவிற்கு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மேலும் வசூலில் 650 கோடி கைப்பற்றியது.

4. பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய பாகங்களை வெற்றி பெற்றதை தொடர்ந்து   பிரபாஸ் அடுத்ததாக நடித்த திரைப்படம் சாஹோ. இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 433 கோடி வசூல் செய்தது.

5. கடைசி இடத்தைப் பிடித்திருப்பது தமிழ் சினிமாவில் சிறப்பாக வலம் வரும்   தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் சுமார் 350 கோடி வசூல் செய்தது. மேலும்  தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தது இந்த படம்.