காதலில் விழுந்து பின் திருமணம் செய்துகொண்ட சீரியல் பிரபலங்கள் – லிஸ்ட் இதோ.!

0

சின்னத்திரை பிரபலங்கள் பலரும்  அவர்களுக்கு இணையான  நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்த சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகிய இருவரும் இந்த சீரியலில் நடிக்கும்போது காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்டனர்.

பின்பு மக்களின் ஃபேவரட் சீரியலானா ராஜா ராணி தொடரில் நடித்து வந்த சஞ்சீவி மற்றும் ஆலியா மானசா இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்கள் இருவருக்கும் ஒரு அழகிய பெண் குழந்தை ஒன்று  உள்ளது. மீண்டும் இவர்கள் இருவரும் தொடர்ந்து வெவ்வேறு சீரியல்களில் நடித்து வருகின்றனர்.

அது போக தற்போது ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார். இதுபோல் இன்னும் சில சின்னத்திரை பிரபலங்களும் திருமணம் செய்து கொண்டுள்ளனர் அந்த வகையில்  ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் புகழ் ஷபானா மற்றும் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் ஆரியன் இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் இவர்களுக்கு திருமணம் ஆகி உள்ளது.

மேலும் ஷபானாவின் நெருங்கிய தோழியான யாரடி நீ மோகினி தொடரில் நடித்து வந்த ரேஷ்மா அதே தொடரில் நடித்து வந்த மதன் என்பவரும் காதலித்து வந்தனர். இந்த ஜோடிக்கும் கடந்த நவம்பர் மாதத்திலேயே திருமணம் ஆகி உள்ளது.

மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் நடித்து வந்த சித்து மற்றும் ஸ்ரேயா ஆகிய இருவரும் இந்த தொடரில் நடிக்கும் போதே காதலித்து அண்மையில்   திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதுபோல் காதலித்து திருமணம் செய்து கொண்ட சீரியல் பிரபலங்களின் அழகிய புகைப்படங்கள் இதோ.

sithu sreya
sithu sreya