வருடம் தோறும் எந்த திரைப்படம் அதிக அளவில் சமூக வலைதளங்களில் தேடப்பட்டிருக்கிறது என்பது குறித்து தகவல் அந்த வருடத்தின் இறுதியில் வெளியாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களும் அதனை தெரிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் தற்போது இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட தமிழ் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தமிழ் திரைப்பட வரலாற்றில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு முதன்முறையாக பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனை வசூல் செய்த திரைப்படம் தான் விக்ரம்.
அந்த வகையில் அதிகம் தேடப்பட்ட லிஸ்டில் விக்ரம் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மிகவும் பிரம்மாண்டமாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றினை பெற்றது. தஞ்சை மண்ணின் பழமையை மாறாமல் எடுத்துக் கூறியது இதிலும் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் நடிகைகள் இணைந்து நடித்திருந்தார்கள்.
பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட நிலையில் இந்த படமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக பல மடங்கு வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வகை 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வலிமை இந்த படம் கலவை விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்ததை விட வெற்றியை பெற்றது இவ்வாறு இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.