வசூலில் 1000 கோடியை கடந்த பதான்.! இதற்கு முன்பு 1000 கோடி வசூல் செய்த படங்களின் லிஸ்ட் இதோ..

சமீப காலங்களாக ரசிகர்கள் சினிமாவில் மிகவும் ஆர்வம் உடையவர்களாக இருந்து வருகின்றனர். ஏனென்றால் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் கோடி கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளிவந்து தற்பொழுது வரையிலும் வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் பதான்.

இந்த படம் வெளியாகி ஒரு மாதம் கூட இன்னும் ஆகாத நிலையில் உலகம் முழுவதும் ரூபாய் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சில வருடங்களாகவே பாலிவுட் நடிகர்களின் திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. தொடர்ந்து படு தோல்வியினை சந்தித்து வந்த நிலையில் தற்பொழுது பதான் படம் ரூபாய் 1000 கோடி வசூல் செய்திருப்பது பாலிவுட் திரைவுலகிற்கு மிகப்பெரிய மகிழ்ச்சினை தந்துள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாருக்கான் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பு தொடர்ந்து பல சர்ச்சைகளில் மாட்டியது எனவே இந்த படம் வெளிவருமா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் பிறகு பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி 1000 கோடி கல்லாகட்டி உள்ளது.

இந்நிலையில் தற்பொழுது ரூபாய் 1000 கோடி வரை இந்தியாவில் எந்தெந்த படங்கள் வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் முதலாவதாக அமீர்கான் நடித்த ‘டங்கல்’ திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி சுமார் ரூபாய் 1968 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 2’ படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது இந்த படம் ரூபாய் 1810 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இரண்டாவது முறையாக எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி ரூபாய் 1200 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளிவந்த யாஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் ரூபாய் 1250 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு இந்த படங்களை அடுத்து பதான் படம் 5 திரைப்படங்களுக்கு பிறகு அதிக வசூல் செய்த படமாக திகழ்கிறது.

Leave a Comment

Exit mobile version