தமிழ் சினிமாவில் தொடர்ந்து 4 ஹிட் படங்களை கொடுத்த நடிகர்களின் லிஸ்ட் இதோ.? இந்த ரேசில் கமர்சியல் படங்களை கொடுத்த நடிகரும் இருக்காரு.?

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் ரஜினி விஜய் அஜித் ஆகியவர்களை தொடர்ந்து தற்போது வளர்ந்து வரும் நடிகர்களின் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனக்கான இடத்தை பிடிக்க முயற்சிக்கின்றனர்.

ஆனால் இந்த ரேஸில் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஒவ்வொரு நடிகரும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தால் தான் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் அதுபோல தான் சினிமாவும் தலையில் தூக்கி வைத்து கொள்ளும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நான்கு ஹிட் படங்களை கொடுத்த நடிகர்கள் யார் என்பதை தற்போது பார்ப்போம்.

  1. தமிழ் சினிமாவில் சிறப்பான இயக்குனர்களை தேர்வு செய்து அந்த படத்தில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் விஜய்யை தொடர்ந்து ஹிட் படங்கலையே கொடுத்து வருகிறார் அது வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வலம் வருகிறது. அதுவும் 100 லிருந்து 200 கோடி மேல் அள்ளுகிறது. விஜய் நடிப்பில் தொடர்ந்து 4 ஹிட் படங்கள் எது என்பதை தற்போது பார்போம் மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர்.
  2. அஜித் நல்ல கதை அம்சத்தை தெரிந்தும், புரிந்தும் நடிக்கிறார் அதனால் அது எல்லாமே அதிரி புதிரியான ஹிட் படங்களாக மாறுகின்றன. அதிலும் இந்த நான்கு படங்கள் தல ரசிகர்களுக்கு எப்போதும் புடிக்கும் அந்த படங்கள் 4  அஜித் கேரியலில் தொடர்ந்து ஹிட் அடித்தது ஆரம்பம், வீரம் ,என்னை அறிந்தால், வேதாளம்.
  3. அனைத்து விதமான ரோல்களிலும் நடிக்க கூடியவர் நடிகர் விஜய் சேதுபதி அதனால் சினிமா உலகில் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளார். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தியில் செம்ம பிஸியாக இருக்கிறார். இவர் நடிப்பில் தொடர்ந்து ஹிட் அடித்த நான்கு படங்கள் இதோ. பீட்சா, சூது கவ்வும்,  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.
  4. தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களை கொடுத்து குடும்பங்களை திரைஅரங்கிற்கு அழைத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் வெளியாகி தொடர்ந்து நான்கு ஹிட் அடித்த படங்கள் எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் மான் கராத்தே. இவை அனைத்தும் நல்ல வசூலை பெற்று தந்தன.

Leave a Comment