அஜித் நடிப்பில் வெளிவந்து பிரம்மாண்ட வசூல் வேட்டை நடத்திய 5 திரைப்படங்கள் – லிஸ்ட் இதோ.!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித். வலிமை படத்தை தொடர்ந்து தனது அடுத்த திரைப்படமான 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து படம் உருவாகுவதாக கூறப்படுகிறது இந்த படத்தில் ஆக்ஷன் சீன்கள் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தின் கதையைக் கேட்ட உடனே நடிகர் அஜித்குமார் சுமார் 20 லிருந்து 25 கிலோ உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் இரண்டு விதமான கெட்டப்பில் நடிக்கிறாராம்.

முதல் கட்ட ஷூட்டிங்கில் வயதான கெட்டப்பில் நடித்த அஜித் இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் இளமையான தோற்றத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. ஏகே 61 படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, அஜய், யோகி பாபு மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இரண்டாவது கட்ட ஷூட்டிங் புனேவில் தொடங்கப்பட இருக்கிறது அஜித்தும் ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார் ஒரு வழியாக முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார் வெகு விரைவிலேயே ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் நடிப்பில் வெளிவந்து.

அதிக அளவு வசூல் வேட்டை நடத்திய திரைப்படங்கள் எது எது என்பது குறித்து தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்று அதிக வசூல் செய்த ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்ப்போம். விசுவாசம் 200 கோடி, வலிமை 200 கோடி, விவேகம் 151 கோடி, வேதாளம் 138 கோடி, நேர்கொண்ட பார்வை 116 கோடி ஆகிய வசூலை பெற்றுள்ளது.

Leave a Comment