20 ஓவர் உலக கோப்பையில் விளையாட போகும் இந்திய அணியின் 15 வீரர்களின் லிஸ்ட் இதோ.! யார் யார் இருகாங்க பாருங்க.

இந்திய அணி இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கிறது இதை முடித்த கையோடு இந்த ஆண்டு நடைபெற இருக்கிற ஏழாவது t20 உலக கோப்பை தொடரில் தொடங்க இருக்கிறது.

இதற்கான இந்திய வீரர்களை இந்திய அணி தற்போது சரியான முறையில் தேர்ந்தெடுத்துள்ளது அந்த வகையில் 15 வீரர்கள் கொண்ட லிஸ்ட்டை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

இந்தப் போட்டி வரும் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மிகப்பெரிய t-20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் இடம் பெறுகின்றன. டாப் அணிகள் தங்களின் வீரர்களை அறிவித்த நிலையில் இந்திய அணி தற்போது 15 பேர் கொண்ட லிஸ்ட்டை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளார். இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார் துணை கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார்.

கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், வருண், அக்ஷர் பட்டேல், பும்ரா, முகமது சமி, புவனேஸ்வர் குமார், ராகுல் சாகர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment