ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ள பம்பர் திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.! ஜிபி முத்து நடித்துள்ள கதாபாத்திரம் இது தான்..

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடித்திருந்தவர் தான் ஷிவானி நாராயணன் இவர் இதற்கு முன்பே சின்னத்திரையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் விக்ரம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் தற்பொழுது இவர் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் நாளை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியாக இருப்பதாக பட குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.அதாவது கேரள மாநில லாட்டரி மையமாக கொண்ட பம்பர் என்ற தமிழ் திரைப்படத்தில் ஹீரோவாக ஜிபி பிரகாஷ் நடித்துள்ளார் மேலும் கதாநாயகியாக ஷிவானி நாராயணன் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தினை வேதா பிக்சர்ஸ் பேனரில் தியாகராஜா தயாரிக்கும் படத்தினை மீரா கதிரவன், கொம்பன்,விருமன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா மற்றும் எம் செல்வகுமார் ஆகியோர்கள் இயக்குனர்களாக பணியாற்றி உள்ளார்கள். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக பம்பர் திரைப்படத்தின் பட குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.

pampar

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்றும் இந்த பணிகள் முடிந்தவுடன் விரைவில் படம் ரிலீஸ் ஆகும். இந்த படம் தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் பம்பர் திரைப்படத்தின் படப்பிடிப்பின் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் சுவாரசியமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் டிவி தங்கதுரை மற்றும் துப்பாக்கி பாண்டினினும் மிகவும் வித்தியாசமான வேடத்தில் டிக் டாக் ஜிபி முத்து நடித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து இந்த படத்திற்கு கோவில் வசந்ததா இசையமைக்க கார்த்திக் நேத்தா என்பவர் பாடல் வரிகளை இயற்றியுள்ளார். சமீபத்தில் பம்பர் படத்தினை பற்றி பேசிய இயக்குனர் செல்வகுமார் கேரளா பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைகளும் என்றும் வெற்றி நாயகனாகவும் அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version