மனைவி மகள் மகன் என தனது குடும்பத்துடன் நடிகர் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..!

சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது மிகப் பெரிய நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தான் ஹீரோவாக நடித்த பிறகும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கூட தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்து இருப்பார் அதேபோல  ரஜினியின் பேட்டை திரைப்படத்தில் கூட ரஜினிக்கு வில்லனாக நடித்து இருப்பார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் கூட நடித்து வருகிறார். பொதுவாக தல தளபதிக்கு ரசிகர் கூட்டம் எவ்வளவு இருக்கிறதோ அந்த வகையில் விஜய் சேதுபதிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் தங்களுடைய ரசிகர்களை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். அந்த வகையில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்பட வெளியீட்டு விழாவில் கூட விஜய்யை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து இருப்பார்.

இவர் பொதுவாக வருடத்திற்கு ஒரு திரைப்படம் நடித்திருந்த நிலையில் தற்போது 10 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்து வெளியிட்டு வருகிறார். என்னதான் அடுக்கடுக்காக திரைப்படங்கள் நடித்து வந்தாலும் இதில் ஒரு திரைப்படம் கூட பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற முடியவில்லை.

அந்தவகையில் இனிமேல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் மட்டுமே நடிப்பேன் என தன்னுடைய ரசிகர்களின் பேச்சை கேட்டு நடந்து கொள்ளப் போவதாக விஜய் சேதுபதி கூரியிருந்தார் இந்நிலையில் விஜய் சேதுபதி காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற திரைப்படம் படபிடிப்பில் உள்ளது.

இது ஒரு பக்கமிருக்க தனது குடும்பத்துடன் நடிகர் விஜய்சேதுபதி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

Exit mobile version