மார்டன் உடையில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்திய நயன்தாரா – லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

nayanthara
nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து பல்வேறு படங்களை கைப்பற்றி நடித்து தனது திறமையை வெளிக்காட்டி அசத்தி வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை முற்றிலுமாக மாற்றி கொண்டு நடிக்கக்கூடிய நடிகைகளில் முதன்மையானவராக இவர் இருக்கிறார்.

மேலும் இவர் நடித்த திரைப்படங்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக இவர் சோலோவாக நடிக்கும் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வேட்டையும் பெற்று அசத்துகிறது. இதனால் நடிகர்களுக்கு இணையாக நயன்தாரா பயணிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் டாப் நடிகர்களுடன் கைகோர்த்துள்ளார்.

அந்த வகையில் அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீண்டும் ஒரு முறை கூட்டணி அமைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் கோல்ட் படத்திலும் இவர் நடித்து முடித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போதாத குறைக்கு இந்தியில் ஷாருக்கானுடன் முதல் முறையாக கைகோர்த்து லயன் என்ற படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இதனால் நயன்தாராவின் மார்க்கெட் அசுர வளர்ச்சியை இன்றளவும் எட்டி வருகிறது.

இவர் சினிமா நேரம்போக தனது காதலுடன் புகைப்படம் எடுப்பது மற்றும் விளம்பரப் படங்களில் நடிப்பது மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா லேட்டஸ்டாக மாடர்ன் உடையில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைபடங்கள் ரசிக்க வைத்துள்ளது. இதோ அந்த அழகிய புகைப் படங்களை நீங்களே பாருங்கள்.

nayanthara
nayanthara
nayanthara
nayanthara