போதை, பெண் என உலகைச் சுற்றி வரும் வாலிபனாக இருக்கும் நடிகர் கார்த்திக்கின் ஜப்பான் பட போஸ்டர் இதோ.!

0
jappan 1
jappan 1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் பட்டியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இறுதியாக விருமன், பொன்னியின் செல்வன் என தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்தார்.

மேலும் சமீபத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் சரிதார். இவ்வாறு அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நடிகர் கார்த்திக் தற்பொழுது ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை குக்கூ, ஜோக்கர் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜமுருகன் ஜப்பான் திரைப்படத்தை இயக்குகிறார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனுமானுவேல் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் கார்த்திக் ஒரு சோஃபாவில் படுத்துக்கொண்டு கையில் சரக்குடன் மது அருந்தி உச்சகட்ட போதை உடன் இருக்கிறார்.

மேலும் கீழே ஒரு பெண் அமர்ந்திருப்பது போல கால் மட்டும் காட்டப்படுகிறது மேலும் உள்ள போஸ்டரில் தங்க நகையுடனும் கையில் உலோக உருண்டை என துப்பாக்கியுடன் மிகவும் கெத்தாக நிற்கிறார் இவ்வாறு இதனை வைத்து பார்க்கும் பொழுது பெண் போதை என உலகை சுற்றி வரும் வாலிபனாக இந்த படத்தில் கார்த்திக் நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

jappan
jappan

இவ்வாறு நடிகர் கார்த்திக் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் ஜப்பான் திரைப்படமும் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான கதை காலத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த போஸ்டரின் மூலம் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இந்த படத்திற்கு காத்து வருகிறார்கள்.