சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பிரபல தடகள வீராங்கனை பிடி உஷா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய தடகள வீராங்கனையான பிடி உஷா தங்கமகள் என்று அனைவராலும் மிகவும் அன்பாக அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 1986ஆம் ஆண்டு சியோலில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள போட்டியில் நான்கு தங்க பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளியை வென்றார். இவ்வாறு இந்தியா விளையாட்டு வீராங்கனையான இவர் தொடர்ந்து நம் நாட்டிற்கு பெருமைகளை சேர்த்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பிடி உஷா தனது சமூக வலைதளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அனுபம்கெர் ஆகியோர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
மேலும் அந்த புகைப்படத்தில் இரண்டு மிகப்பெரிய இந்திய சினிமா மேதைகளுடன் நான் என்று அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றனர். மேலும் பிடி உஷாவிற்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதால் ரசிகர்கள் வயதான காரணத்தினால் இவருடைய திரைப்படங்களில் சுறுசுறுப்பு இல்லை என கூறி வருகிறார்கள். மேலும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்து வந்தாலும் வசூல் ரீதியாக எப்பொழுதும் மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகிறது.