அந்த மாதிரி காட்சிகளை பார்த்து மிரண்டுபோன சென்சார் போர்ட் பிரபுதேவாவின் ‘பஹிரா’ படத்திற்கு எந்தமாதிரியான சர்டிபிகட் கொடுத்துள்ளார்கள் பார்த்தீர்களா.!

bahira

நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா நடிப்பில் தற்பொழுது பஹிரா படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்திற்காக இந்திய அரசின் சென்சார் போர் கொடுத்த சான்றிதழ் விபரம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. சினிமாவிற்கு நடன இயக்குனராக அறிமுகமாகி பிறகு நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டு விளங்குபவர் தான் இயக்குனர் பிரபு தேவா.

இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பஹிரா. திரிஷா இல்லனா நயன்தாரா, AAA போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் பஹிரா படத்திணையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வருகின்ற மார்ச் 3ம் தேதி அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகி உள்ளது. எனவே இதன் காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் பிரபுதேவா உடன் இணைந்து அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், நாசர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் காமெடி, ஆக்சன் என உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமான எதிர்பார்த்து வருகின்றனர்.

prabu deva
prabu deva

இதனை அடுத்து அபிநந்தன் ராமானுஜன், செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய கணேஷ் எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புது ட்ரெய்லர் நேற்று முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது இந்நிலையில் இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 2 மணி நேரம் 26 நிமிடங்கள் 41 நொடிகள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.