மறைந்த நடிகர் விவேக்கிற்கு இத்தனை திரைப்படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது இதோ முழு லிஸ்ட்.!

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பை காட்டி கோடிக்கணக்கான ரசிகர்களை சேர்த்து வைத்தவர் தான் விவேக் இவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் மேலும் அவர் மறைந்தாலும் அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் தற்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

விவேக்குடன் பழகி வந்த நண்பர்கள்,உறவினர்கள்,மக்கள் போன்ற ஏராலும் அவரை மறக்க முடியாமல் விவேக்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்,வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இவர் அப்துல் கலாம் ஐயா சொன்ன பொன்மொழிகளை வைத்துக்கொண்டு 33 லட்சம் மரக்கன்றுகளை இதுவரை நட்டு வைத்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று மேலும் அவரது ஆசை ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்று தான் ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது.

விவேக் இறந்த பொழுது அவரது ரசிகர்கள் பலரும் மரக்கன்றுகளை நட்டு வைத்து புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இனிமேல் திரையில் பார்க்க முடியாது என கூறி வரும் நிலையில் தற்போது அவர் இறுதியாக நடித்த திரைப்படங்கள் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது.

விவேக் இறுதியாக முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளாராம் அதுமட்டுமல்லாமல் லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக நடிக்கும் படத்திலும் அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

இன்னும் பெயரிடாத ஒரு திரைப்படத்திலும் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் திரைப்படத்தில் விவேக் நடித்து வந்தார் ஆனால் அவர் நடிக்கும் பட காட்சி முடிந்து விட்டது என தகவல் கிடைத்துள்ளது.இதனை அடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படங்கள் கூடிய சீக்கிரம் வெளிவந்தால் நல்லா இருக்கும் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment