மணிவண்ணன் இயக்கத்தில் தமிழ் சினிமாவை மிரட்டிய 6 திரைப்படங்கள் இதோ முழு லிஸ்ட்.!

தமிழ் சினிமா உலகில் பல இயக்குனர்கள் நடிகர்களாக இருந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குவார்கள் அவர்கள் மறைந்தாலும் அவர்கள் இயக்கிய திரைப்படங்கள் தற்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தவர் தான் மணிவண்ணன் இவர் நடிகர் என்பது தான் நமக்குத் தெரியும் ஆனால் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று தான் அதிலும் குறிப்பாக இவர் அரசியல்வாதிகள் செயல் எப்படி இருக்கும் என்பதை உண்மையாக திரைப்படத்தில் காண்பித்தவர்.

அதைப்பற்றி நாம் இப்போது விரிவாக பார்ப்போம் மணிவண்ணன் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூறாவது நாள்:இந்த திரைப்படம் சத்யராஜ் நடிப்பில் வெளியாகி நளினி,மோகன், விஜயகாந்த் போன்ற பலரும் நடித்திருப்பார்கள் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அமைதி படை:இந்த திரைப்படத்தில் மணிவண்ணன் குணசித்ர வேடத்தில் நடித்திருப்பார் சத்யராஜ் அதில் அரசியல்வாதியாக நடித்து மிரட்டி இருப்பார் இந்த திரைப்படம் அந்த காலத்திலேயே நல்ல வரவேற்ப்பை பெற்றதால் இதனை இரண்டாவது பாகமும் இயக்கியிருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் இந்த படம் 100 நாட்கல் மேல் ஓடி சாதனை படைத்தது.

amaidhi padai

ஜல்லிகட்டு: இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து சத்யராஜ் அசத்தலாக நடித்திருப்பார் நம்பியார் ஜனகராஜ் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்ததால் இந்த திரைப்படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

24 மணி நேரம்: மிகவும் த்ரில்லராக திரைக்கதையை மணிவண்ணன் எழுதிருப்பார் அதிலும் குறிப்பாக மோகன்,சத்யராஜ்,நளினி,ஜெய்சங்கர் போன்ற  சினிமா பிரபலங்கள் நடித்திருப்பார்கள் இதில் இசைஞானி இளையராஜாவின் இசை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும்.

24 manineram

சின்ன தம்பி பெரிய தம்பி: மணிவண்ணன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவானது இந்த திரைப்படம் 150 நாட்களுக்கும் தாண்டி திரையரங்களில் ஓடி சாதனை படைத்தது மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது அதுமட்டுமல்லாமல் சத்யராஜ்,பிரபு இருவரும் இணைந்து நடித்ததால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

மூன்றாவது கண்: இந்த திரைப்படம் 1993 ஆம் ஆண்டு திரில்லர் கதை கொண்டு உருவானதால் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தது மேலும் இதில் சரத்குமார்,நிழல்கள் ரவி,ராஜா மோனிஷா,மன்சூர் அலிகான் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அதிக நாள் ஓடி சாதனை படைத்தது.

மேலும் இதே போல் மணிவண்ணன் இயக்கத்தில் உருவான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version