விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்துள்ள மகான் திரைப்படத்தின் முதல் பாடல் இதோ.!

0

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்து வரும் திரைப்படம் தான் மகான் இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்தத் திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருகிறார்.இந்த திரைப்படத்தில் வாணிபோஜன்,சிம்ரன்,பாபி சிம்ஹா,சனத் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலானதை நாம் பார்த்திருக்கலாம் சமீபத்தில் கூட இந்த திரைப்படத்தில் இருந்து இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் விக்ரம்,துருவ் விக்ரம் ஆகிய இருவரும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தார்கள்.

இந்நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தை பற்றி சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது ஆம் மகான் திரைப்படத்தின் அடுத்த அப்டேட் ஆக இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.ஆம் சூறையாட்டம் என்ற பாடல் தற்போது வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை வி.எம் மகாலிங்கம் என்பவர் பாடியுள்ளார் முத்தமிழ் என்பவர் இந்த பாடலை எழுதி உள்ளாராம்.மேலும் இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த பாடல் கிராமத்து கதை களம் கொண்ட பாடல் போல் தெரிகிறது.

இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு நாங்கள் மிக ஆவலாக இருக்கிறோம் எப்பொழுது இந்த திரைப்படம் ரிலீஸ் தேதி வெளியாகும் அது மட்டும் தெரிந்து விட்டால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம் என இந்த பாடலை சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.