பத்து தல படத்தின் முதல் விமர்சனம் இதோ.! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவர் தற்பொழுது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் உள்ள நிலையில் இந்த படத்தின் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் உள்ள ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள ஒரு ஐட்டம் பாடல் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த ஐட்டம் பாடலுக்கு நடிகை சாயிஷா அவர்கள் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் மூன்று நாட்கள் மட்டும் உள்ள நிலையில் தற்போது இந்த பத்திரத்தின் முதல் விமர்சனம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது பத்து தல திரைப்படத்தில் நடிகர் சிம்பு அவர்கள் ஏ ஜி ஆர் என்கிற கதாபாத்திரத்தில் கேங்ஸ்டர் ஆக அவதாரம் எடுத்துள்ளார்.

மணல் மாஃபியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சிம்புவின் சினிமா வாழ்க்கையில் இந்த திரைப்படம் ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சிம்புவின் நடை உடை ரியாக்ஷன் டயலாக் என எல்லாவற்றையும் பார்க்கும்போது இந்த படம் சிம்புவிற்கு மிகப்பெரிய திருப்புமுறையாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பத்து தல திரைப்படம் சிம்புவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய படமாக அமையப்போகிறது இந்த படத்தில் சிம்புவை பத்து விதமான கோணங்களில் காட்டி இருக்கிறது மிகவும் அருமையாக இருக்கிறது.

மேலும் பத்து தல திரைப்படத்தில் முதல் பாதியில் ஆங்காங்கே சிம்புவை காட்டி இருந்தாலும் இரண்டாவது பாதியில் சிம்புவின் நடிப்பு பல இடங்களில் பார்ப்பவரை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. தற்போது சோசியல் மீடியாவில் இந்த படத்தின் முதல் விமர்சனம் குறித்த பரபரப்பாக தான் பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment