அரண்மனை 3யில் கெத்தாக இருக்கும் விவேக் இதோ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.!

தனது கதையை அபூர்வமாக ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக வித்தியாசமான கதை களம் கொண்டு திரைப்படங்கள் எடுத்துவரும் இயக்குனர்களில் முக்கியமான இயக்குனர் சுந்தர் சி இவர் தனது ரசிகர்களுக்கு படம் வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை தான் எடுத்துவருவார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை முதலாம் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் ஆகிய இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது அந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான போது த்ரில்லராக இருந்தது என ரசிகர்கள் பலரும் கூறினார்கள்.

அந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி தற்போது மூன்றாம் பாகத்தை இயக்கி முடித்து விட்டாராம் இந்த மூன்றாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து அதில் கதாநாயகனாக ஆரியா அவருடன் ராசிகன்னா,ஆண்ட்ரியா,விவேக்,யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் விவேக் மறைந்தாலும் அவர் நடித்த காட்சியை ரசிகர்கள் பார்ப்பதற்கு மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

நேற்றுதான் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மட்டும் மோஷன் போஸ்டர் நாளைக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.அவர் சொன்னபடி இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது ஆம் இதில் பல சினிமா பிரபலங்களும் நடித்துள்ளார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் மோஷன் போஸ்டரை பார்க்கும்போது ரசிகர்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது என பல ரசிகர்கள் இந்த மோஷன் போஸ்டரை பார்த்து விட்டு கூறுகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் படம் எப்போது வரும் திரையரங்குகளில் பார்ப்பதற்கு தயாராகி விட்டோம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment