விஜய் சேதுபதியின் மிரட்டலான மும்பைகர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

0

கடந்த 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கி தனது முகத்தை ரசிகர்களுக்கு பதிய வைத்த இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ் இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து கைதி அடுத்ததாக விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படம் அந்த ஆண்டு சிறந்த திரைப் படத்தில் ஒன்றாக அமைந்தது அதனாலேயே அவருக்கு நல்ல பெயர் கிடைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

மேலும் அந்த மாநகரம் திரைப்படத்தில் ஸ்ரீ,சார்லி,மதுசூததன்,சந்தீப் கிஷன்,ரெஜினா, முனீஸ்காந்த் போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

இதனையடுத்து இந்த திரைப்படத்தை தற்போது இந்தி ரீமேக் உரிமையை ஒளிப்பதிவாளரான சந்தோஷ்சிவன் வாங்கி இயக்கவுள்ளார் அந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இந்த இந்தி ரீமேக்கிற்கு மும்பைகர் என்ற படத்தலைப்பு வைத்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி,விக்ராந்த் மாசே,ரன்வீர் ஷோரே மற்றும் சச்சின் கடேகர் போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் கதை வித்தியாசமாக தான் இருக்க போகிறது என கூறிவருகிறார்கள்.