அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

0
Anupama-Parameswaran
Anupama-Parameswaran

மலையாள திரையுலகில் நடிக்க ஆரம்பித்து தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன் இவர் மலையாள திரையுலகில் பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டது அதனை தொடர்ந்து மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பின்பு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கி தமிழில் நடிக்க துவங்கினார் தமிழில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் அதிலும் குறிப்பாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது முன்னணி நடிகையாக விளங்கும் இவர் மலையாளம்,தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதிலும் குறிப்பாக தெலுங்கு திரையுலகில் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ள இவர் அங்கேயும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக வைத்திருக்கிறார்.

மேலும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் தெலுங்கு ரீமேக்கில் நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார். இந்நிலையில் இவர் நடிகர் நிகில் சித்தார்த் நடிக்கும் 18 PAGES என்ற காதல் ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Anupama Parameswaran2
Anupama Parameswaran2

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இவர் மிகவும் அழகாக இருக்கிறார் மேலும் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என இவரது ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டு வருவது மட்டுமல்லாமல் நீங்கள் மீண்டும் தமிழில் நடிக்க வேண்டும் அதுதான் எங்களுக்கு முக்கியம் என ஒரு சில ரசிகர்கள் கூறுவது மட்டுமல்லாமல் பலரும் இந்த திரைப்படத்தில் நீங்கள் ரொமான்டிக்காக நடித்திருப்பது எங்களுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.