சார்பட்டா பரம்பரை 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா இவர் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இணைந்து தனது 34-வது படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ஆர்யா. இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.

இதனை தொடர்ந்து  இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது இதனை தொடர்ந்து விரும்பன் பாணியில் தற்போது ஆர்யாவின் 34 வது திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியான சித்தி இதானி நாயகியாக நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இந்த படம் முடிவடைவதற்குள் அடுத்ததாக ஆர்யா நடிக்கும் படத்தின் அப்டேட் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது கடந்த 2021 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

இந்த திரைப்படத்தில் நடித்த ஆர்யாவை விட பசுபதிக்கு தான் அதிக வரவேற்பு கிடைத்தது என்றே சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் நடிகர் ஆர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமனையாக இந்த படம் அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது சார்பட்டா பரம்பரை 2 பாகம் உருவாக இருக்கிறது. மேலும் இந்த படத்தின் ஒரு புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் சார்பட்டா பரம்பரை 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

இதோ சார்பட்டா பரம்பரை 2 பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

sarpatta parambarai 2
sarpatta parambarai 2

Leave a Comment