ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை எல்லாம் ஓரம் கட்டும் அளவிற்கு தனது திரைப்படங்களை மிகவும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பார்த்து பார்த்து நடித்து வந்த நடிகர் தான் பிரபுதேவா இவர் தமிழ் திரையுலகில் நடன இயக்குனர்,நடிகர்,இயக்குனர் என பல திறமைகளைக் கொண்டு ஒரு ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் வலம் வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டது அதிலும் குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான தேவி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.
என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இவர் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நடிக்காமல் இருந்தார் ஆனால் தற்பொழுது இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.ஆம் இவரது நடிப்பில் பொன் மாணிக்கவேல், பஹீரா,யங் மங் சங், பொய்க்கால் குதிரை போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
பொய்க்கால் குதிரை திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் சந்தோஷ் பி ஜெயக்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து பஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் இந்த போஸ்டரில் பிரபுதேவா கையில் ஒரு குழந்தையுடன் மிகவும் கோபமாக இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அவருக்கு ஒரு செயற்கை கால் பொருத்தப்பட்டு உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் இந்த திரைப்படத்தில் ஒரு கால் இருக்காது என்பது மட்டும் தெரிகிறது என கூறி வருகிறார்கள்.