புதிய கதைகளத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக்.! வெளியானது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்கள் தான் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.

அதாவது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் தான் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆம் இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.

அதாவது இந்த திரைப்படத்திற்கு மிஸ்டர். எக்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் போன்ற பலமொழிகளிலும் உருவாக உள்ளதாம். மேலும் நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து எப்படியோ தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார்.

அதேபோலத்தான் நடிகர் கௌதம் கார்த்திக் அவர்களும் இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பத்து தல மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது  இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன் இவர் இணைந்து நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி வருகிறார்.

இதனைத்தொடர்ந்து பார்த்தால் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்கும் மிஸ்டர். எக்ஸ் திரைப்படம் எப்படிப்பட்ட கதைகளத்தில் உருவாகி வருகிறது எங்களுக்கு அது மட்டும் தெரிந்தால் நன்றாக இருக்கும் ஏனென்றால் படத்தின் போஸ்டரை பார்க்கும் பொழுது வித்தியாசமான கதாபாத்திரங்களில் இவர்கள் இருவரும் நடித்து வருவது போல் தெரிகிறது என்றும் ரசிகர்கள் பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment