அலாவுதீன் படத்தின் சாயலில் உருவாகியுள்ள “ஆலம்பனா” வைபவ், முனீஸ் கான் மிரட்டும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

0

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகரும் , அதேசமயம் கவனிக்கப்படும் நடிகராக உருமாறி உள்ளவர் வைபவ்.

இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார் அன்றிலிருந்து இன்று வரையிலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவரது படங்கள் முதலுக்கு மோசம் இல்லாமல் ஓடுகின்றன.

தற்போது இவரது நடிப்பில் காட்டேரி என்ற திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் அப்போது திரையரங்கு அனுமதி இல்லாததால் படம் தள்ளிப்போனது அதனால் அந்த திரைப்படமும் தற்போது ரிலீசாகாமல் தள்ளிக் கொண்டே போகின்றன.

இந்த நிலையில் வைபவ் புதிதாக நடித்துள்ள ஆலம்பனா திரைப்படம் சம்மர் சீசனில் குழந்தைகளுக்கு விருந்து அளிக்கும் படமாக அமையும் என தெரிய படுகிறது.

அலாவுதீன் திரைப்படத்தின் சாயலில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் போல தெரிகிறது.

போஸ்டரைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

இப்படத்தில் அரசராக வைபவ் பூதமாக முனீஸ் கான் நடித்து உள்ளார்களா என்பது தெரியவில்லை . இவர்களை தவிர வேறு யார் நடித்துள்ளனர் என்பது தெரியவில்லை.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார் இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதோ அந்த படத்தின் போஸ்டர்.