மிகவும் வித்தியாசமாக கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘அஜினோமோட்டோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

முன்னணி நடிகர்களில் உருவான ஆர்.எஸ் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள அர்ஜுனோமோட்டோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியாகி உள்ள நிலையில் இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன்னுடைய இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது மேலும் இந்த படம் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்த படத்தினை அறிமுக இயக்குனர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் அஜினோமோட்டோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்.எஸ் கார்த்திக் நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ரேமா நடித்து இருக்கிறார். மேலும் இவர்களைத் தொடர்ந்து ஆனந்த் நாத், பிரான்ச், திவாரி, ஆராதன்யா, ஷ்யாம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இவர்களைத் தொடர்ந்து கே. கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய டி எம் உதயகுமார் இசையமைத்து இருக்கிறார் மேலும் படத்தொகுப்பு பணிகளை எம்.எஸ் ஸ்ரீநாத் மேற்கொண்டு இருக்கிறார் கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தினை தத்தாத்ரே ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் சார்பில் சிவராஜ் பன்னீர்செல்வம் மற்றும் ஆர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளார்கள்.

ajinomotto

இந்த படத்தினை பற்றி இயக்குனர் பேசுகையில், அஜினோமோட்டோ என்பது சுவையை அதிகரிக்கக் கூடியது ஆனால் இது மனிதர்களை மெதுவாக கொள்ளும் விஷம் இதனை மையப்படுத்தி அஜினோமோட்டோ படத்தின் கதை தயாராகி இருக்கிறது. கதையில் நடைபெறும் சில சம்பவங்கள் கதாபாத்திரங்கள் இருக்கு அந்த சமயத்தில் நல்லதாக தோன்றும் ஆனால் பிறகு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்‌.

ajinomotto 1

அதன் பின் விளைவுகளும் கடுமையாக இருக்கும் அது என்ன என்பதை சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி இருப்பதே இந்த படத்தின் முழு கதை மேலும் இது போன்ற அனுபவங்களை கழுகு கண் பார்வையுடனான திரைக்கதையாக விவரிக்கும் பொழுது பார்வையாளர்களுக்கு புது வகையான அனுபவம் கிடைக்கும் என்றார்.

Leave a Comment

Exit mobile version