நடிகர் அஜித் லேட்டஸ்ட்டாக ஓட்டிய “பைக்” பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இதோ.!

ajith
ajith

தல அஜித் தற்போது ஹச் . வினோத்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் இதே ஆண்டில் வெளியாக இருக்கிறது ஆனால் சரியான தேதி இன்று வரையிலும் கிடைக்காமல் இருப்பது அஜித் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இதை தொடர்ந்து 61 வது படத்தை இயக்குனர் ஹச் . வினோத்துக்கே கொடுத்துஉள்ளதாக தகவல்கள் கசிகின்றன இது இப்படியிருக்க  ஒவ்வொறு படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக தனது குடும்பம் மற்றும் ஊர் சுற்றுவதும் வழக்கமாக வைத்திருப்பவர் அஜித்.

அந்த வகையில் தனக்கு பிடித்த கார் மற்றும் பைக்குகளை எடுத்துக்கொண்டு ஒரு ரவுண்ட் அடிப்பார் அந்த வகையில் வலிமை திரைப்படத்தை முடித்துவிட்டு அண்மையில் வீடு திரும்பிய அஜீத்.

ஒரு வித்தியாசமான விலை உயர்ந்த பைக்கை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்டு அடித்து உள்ளார் அப்பொழுது அவரை கவனித்த ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்தனர் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகின. மேலும்  அவர் பயன்படுத்திய பைக் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகியுள்ளன அதை தற்போது பார்ப்போம்.

அஜித் பயன்படுத்திய பைக் BMW R 12500 GS. இதன் இந்திய மதிப்பு சுமார் 22.40லட்சம் என கூறப்படுகிறது. இதன் பெட்ரோல் கொள்ளளவு 30 லிட்டர் 228 கிலோ எடை கொண்ட இந்த பைக் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.